அக்கப்போர்
பத்திரிக்கை உலகில் 'அக்கப்போர்' வாராந்தரி ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக இருந்தது. அதாவது உயிர் மட்டும் தான் இருந்தது 'தடாலடி' என்கிற புது எழுத்தாளர், வாசகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு எழும்படி எழுத ஆரம்பிக்கும் வரை. வித்தியாசமாக ஈர்க்கும் விதமாக எல்லோரும் சிலாகிக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை அலசி ஆராய்ந்து கடைசியில் அது ஒரு அபத்தம் என்று (கு)தர்க்க வாதங்களினால் ஸ்தாபிக்க வேண்டியது. ஆனால் அவர் தரப்பு வாதத்தை சுலபமாக மறுக்க முடியாதபடி எழுதுவதுதான் அவரது சாமர்த்தியம் . எல்லா இடத்திலும் எப்போதும் பொதுஜன கருத்தை துவேஷிக்கும் கோஷ்டி ஒன்று சமூகத்தின் அங்கமாக இருக்கும் அல்லவா ! அத்தகைய கோஷ்டியின் ஆதரவு தான் எப்பொழுதும் அவர் எழுத்தை அணையாத அக்னியாக காத்துக்கொண்டு இருந்தது! இந்த விசேஷ எழுத்து வாசனை ஒவ்வொரு வாரமும் மற்ற வாசகர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்க ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். எதிர்ப்போர் இல்லாமல், எதிர் போர் இல்லை. இப்படி ராஜபாட்டையில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்த தடாலடியின் எழுத்துக்களுக்கு , இரண்...